ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் ஏற்பாட்டில் காணி உரிமம் இன்றி வாழும் மக்களுக்கு இலவச சட்ட ஆலோசனை!
Saturday, August 20th, 2016
ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் ஏற்பாட்டில் குருநகர், கொட்டடி மற்றும் யமுனா ஏரி ஆகிய பகுதிகளில் காணி உரிமம் இன்றி வாழும் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் இடர்பாடுகள் தொடர்பாக ஆராய்ந்து இலவச சட்ட ஆலோசனை வழங்கும் நிகழ்வு இன்றையதினம் மேற்கொள்ளப்பட்டது.
ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவின் ஆலோசனைக்கு அமைய யாழ் மாவட்ட நிர்வாக செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரமான கா வேலும்மயிலும் குகேந்திரனின் (வி.கே.ஜெகன்) ஒருங்கமைப்பில் இன்றையதினம்(20) குறித்த பகுதிகளுக்கு விஜயம் மேற்கொண்ட சட்டத்தரணி ரெங்கன் அப்பகுதி மக்களது பிரச்சினைகளை கேட்டறிந்து அவர்களுக்கான சட்ட ஆலோசனைகளை வழங்கியிருந்தார்.
குறித்த நிகழ்வில் அதிகளவான மக்கள் கலந்துகொண்டு தாம் வாழும் காணிகள் பற்றியும் அதற்கான உரிமங்களை பெற்றுக்கொள்வது தொடர்பாகவும் மிகுந்த ஆவலுடன் ஆலோசனைகளை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்வில் கட்சியின் யாழ்ப்பாண பிரதேச நிர்வாக செயலாளர் றீகன் உடனிருந்தார்.


Related posts:
|
|
|


