தேர்தல் ஆணையாளர் வேட்பாளர்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை!

Friday, November 15th, 2019


தேர்தல் பிரச்சார காலத்தினுள் விகாரையில் அல்லது புனித தளத்தில் தேர்தல் கூட்டத்தை நடத்தினால் அந்த வேட்பாளர் வெற்றிப்பெற்றாலும் அந்த வெற்றியை ரத்து செய்ய அதிகாரம் இருப்பதாக தேர்தல் ஆணைக்குழுவின் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

தேர்தல் ஆணையர் மஹிந்த தேசபிரிய அண்மையில் பல சிவில் மற்றும் ஊடக அமைப்புகளின் பிரதிநிதிகளை சந்தித்தபோது இதனை குறிப்பிட்டுள்ளார். இதன்போது வரலாற்றினுள் இந்த தவறு காரணமாக unseat செய்த (வெற்றி இழந்த) அரசியல்வாதிகளும் உள்ளனர் என்று தேர்தல் ஆணையாளர் மஹிந்த தெரிவித்துள்ளார்.

“நான் டிவி சேனல் ஒன்று கிடைக்கும் வரை இருக்கிறேன் இதை கூற. முப்பது வேட்பாளர்களுக்கு நான் கொடுக்கும் சவால் இது. முடிந்தால் செய்து காட்டுங்கள்… நான் அன்சீட் செய்வேன்…” என அவர் குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இருப்பினும், ஐந்து நாட்களுக்கு முன்னர் ஒரு தனியார் தொலைக்காட்சி சேனலில் ஒன்றரை மணிநேர நேரடி உரையாடலில் கலந்து கொண்ட போதிலும் தேர்தல் ஆணையத்தின் தலைவர் சவாலை முன்வைக்கவில்லை என்பதை நாங்கள் கவனித்தோம்.

Related posts:

முன்பள்ளி ஆசிரியர்களின் வாழ்வியலுக்கு ஒளியேற்றிக் கொடுத்தவர் டக்ளஸ் தேவானந்தா அவர்களே - ஈ.பி.டி.பியி...
உயர்தர பரீட்சை நவம்பர் மாதம்வரை ஒத்திவைக்கப்பட வாய்ப்பு - பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த தெ...
2000 பதின்ம வயது தாய்மார்கள் பதிவு - பாலியல் கல்வியின் அவசியத்தை வலியுறுத்தும் சிறுவர் பாதுகாப்பு அத...