கிளிநொச்சியில் பால் சார் உற்பத்தித் தொழிற்சாலையை அமைக்காதிருப்பது கவலைக்குரியது – மாவட்ட பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள்!

Thursday, July 26th, 2018

கிளிநொச்சி மாவட்டத்தில் பால் உற்பத்தி கணிசமான அளவில் உயர்ந்துள்ள போதிலும் கிளிநொச்சி மாவட்டத்தில் ஒரு பால் சார் உற்பத்தித் தொழிற்சாலையை அமைக்காதிருப்பது கவலைக்குரியதாகவுள்ளது என கிளிநொச்சி மாவட்ட பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

கிளிநொச்சி அரச செயலகத்தில் இடம்பெற்ற மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தின் போதே அவர் இவ்வாறு கவலை வெளியிட்டுள்ளனர்.

மேலும் தெரிவிக்கையில் –

இப்பகுதியில் ஒரு பால் சார் உற்பத்தித் தொழிற்சாலையை உருவாக்குவதன் மூலம் பலர் வேலைவாய்ப்பை பெற முடிவதுடன் பண்ணையாளர்களையும் ஊக்குவிக்க முடியும். எனினும் இது தொடர்பில் மாகாணசபை இவ்வளவு காலமும் நடவடிக்கை எடுக்காததையிட்டு கவலையடைவதுடன். இனிவரும் காலங்களிலாவது உரிய நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு கிளிநொச்சி மாவட்ட பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அத்துடன் பெளசர்கள் மூலம் வன்னியிலிருந்து தென்னிலங்கைக்கு பசுப்பாலை கொண்டு சென்று அங்கிருந்து பக்கட்டுகளில் பால்மாவை அனுப்புகிறார்கள். உள்ளூர் உற்பத்திகளை சரியான முறையில் நாங்களே பயன்படுத்தக்கூடியவாறு சாதாரண தொழிற்சாலைகளையாவது அமைக்க வேண்டும் என அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

Related posts: