மத்திய வங்கி ஆளுநர் உறுதியுரை!

Thursday, September 28th, 2017

முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவின் கூற்றுக்கள் தொடர்பாக தான் பதிலளிக்க தயாரில்லை என மத்திய வங்கியின் ஆளுநர் இந்திரஜித் குமாரசாமி தெரிவித்திருக்கின்றார்.

மத்திய வங்கியின் திறமையற்ற அதிகாரிகளாலேயே இலங்கையில் வாழ்க்கைச் செலவு அதிகரித்துள்ளதாக சமீபத்தில் ரவி கருணாநாயக்க பகிரங்கமான குற்றச்சாட்டினை முன்வைத்திருந்தார். இந்நிலையில் நேற்று மத்திய வங்கியில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது ரவி கருணாநாயக்கவின் கூற்று பற்றி செய்தியாளர் ஒருவர் கேள்வியொன்றை முன்வைத்தார். அதற்குப் பதிலளித்த ஆளுநர் குமாரசாமிஇ முட்டாள்தனமான கூற்றுக்கள் சம்பந்தமாக பதிலளிக்க நான் தயாரில்லை. மத்திய வங்கியில் இருக்கும் அதிகாரிகள் அனைவரும் திறமையானவர்கள். நிதியமைச்சினால் வட் வரி அறவீடு தொடர்பான வழிகாட்டல்கள் மறுசீரமைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாகவே வாழ்க்கைச் செலவு அதிகரித்துள்ளது. இதற்கும் மத்திய வங்கிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்றும் இந்திரஜித் குமாரசாமி தெரிவித்திருக்கின்றார்.

Related posts:

கொக்குவில் இந்துக்கல்லூரி அதிபர் நியமன முறைகேட்டுக்கு எதிரான போராட்டத்திற்கு ஈ.பி.டி.பி ஆதரவு!
நாரந்தனை ஶ்ரீமுருகன் வீதி புனரமைப்பு பணிகள் தொடர்பில் ஊர்காவற்றுறை பிரதேச சபை தவிசாளர் ஜெயகாந்தன் நே...
தமிழ் மக்கள் ஒருபோதும் புறக்கணிக்கணிக்கப்பட மாட்டார்கள் - நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ உறுதிபடத் தெ...