கிளிநொச்சியில் குழாய் நீர் இணைப்பு 1300 இற்கு மேல் விண்ணப்பங்கள் இதுவரை 229 இணைப்புக்கள்!

Tuesday, January 9th, 2018

கிளிநொச்சி கரைச்சி கண்டாவளைப்பிரதேசத்தில் குழாய் நீர் இணைப்புக்காக 1300 இற்கு மேற்பட்ட குடும்பங்களினுடைய விண்ணப்பங்கள் கிடைத்திருப்பதாகவும் 229 வரையான இணைப்புக்கள் வழங்கப்பட்டுள்தாகவும் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்ப சபையின் வாமட்டப்பொறியியலாளர் ஆர் சுபேந்திரன் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்த ஏனைய குடும்பங்களுக்கான நீர் விநியோக இணைப்புக்களை வழங்குவதற்கு நடவெடிக்கை எடுக்கப்பட்ட வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

கிளிநொச்சி மாவட்டத்தின் நீர் விநியோகத்திட்டம் கடந்த யுத்ததின் போது சேதமடைந்துள்ளதுடன், கிளிநொச்சி நகரப்பகுதியில் இருந்த நீர்த்தாங்கியும் பரந்தன் மற்றம் மற்றம் தட்டுவன்கெடடிப்பகுதியிலிருந்த நீர்த்தாங்கிகளும் உடைத்த சேதமாக்கப்பட்டன.

இதனையடுத்த கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி, கண்டாவளை , பிரதேச செயலர் பிரிவுகளில் நாற்பதாயிரம் பேருக்கான குடிநீர் விநியோகத்திட்டத்கைத மேற்கொள்ளும் வகையில் குடிநீர் விநியோகத்திட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இதற்கான நீர் சுத்திகரிப்பநிலையம், நீர் பெறும் கிணறு என்பன கிளிநொச்சிக்குளத்தினை அண்மிய பகுதியில் அமைக்கப்பட்டுள்ளதுடன், கிளிநொச்சி இரத்தினபுரம் மற்றும் பரந்தன்   குமரபுரம்  ஆகிய பகுதிகளில் இரண்ட பாரிய நீர்த்தாங்கிகள் அமைக்கப்பட்டு நீர் விநியோகக்குழாய்கள் பொருத்தப்பட்டன.

ஜப்பானிய அரசின் 925 மில்லியன் ரூபா நிதியிலும் இலங்கை அரசாங்கத்தினத 740 மில்லியன் ரூபா நிதியிலும் மேற்படி குடிநீர் விநியோகத்திட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts: