கிரிக்கெட் நிர்வாகத்தில் ஈடுபடும் நோக்கம் எதுவுமில்லை – ரோகித ராஜபக்ச திட்டவட்டம்!

கிரிக்கெட் நிர்வாகத்தில் ஈடுபடும் நோக்கம் எதுவுமில்லை என ரோகித ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
ரோகித லங்கா பிரீமியர் லீக் போட்டிகளில் விளையாடவுள்ளார், அவர் கிரிக்கெட் நிர்வாகத்தில் தன்னை ஈடுபடுத்திக்கொள்ள திட்டமிட்டுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
அவர் மக்கோனா சரே மைதானத்தில் இடம்பெற்ற பயிற்சி போட்டியொன்றில் கலந்துகொண்டார். 50 ஓவர் போட்டிகளில் களுத்துறை அணிக்கு விளையாட விருப்பம் வெளியிட்டுள்ளார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளனஃ
அவர் எல்பிஎல் போட்டிகளில் விளையாட முயல்கின்றார் இல்லாவிட்டால் கிரிக்கெட் நிர்வாகத்தில் ஈடுபட விரும்புகின்றார் என தகவல்கள் ஊகங்கள் வெளியாகியுள்ளன.
எனினும் இதனை நிராகரித்துள்ள ரோகித ராஜபக்ச இலங்கையின் கிரிக்கெட் நிர்வாகத்தில் ஈடுபடும் நோக்கமில்லை, எல்பிஎல் போட்டிகளில் விளையாடும் எண்ணமில்லைஎன குறிப்பிட்டுள்ளார்.
நான் விளையாட்டுகளில் மீதுள்ள ஆர்வம் காரணமாகவே எந்த விளையாட்டையும் விளையாடுகின்றேன், நான் தற்போது ரக்பி போட்டிகளிற்காக தயாராகிவருகின்றேன், நான் தற்போது எனது பழைய தோமியன் அணியுடன் கிரிக்கெட் விளையாடி வருகின்றேன் என அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது..
000
Related posts:
|
|