டொலர் கையிருப்பு குறைவடைவு – டொலருக்கு பதிலாக இந்திய ரூபாவை பயன்படுத்துவதற்கு அரசாங்கம் அவதானம்!

Monday, January 9th, 2023

நாட்டில் டொலர் கையிருப்பு குறைவடைந்துள்ளமையினால், இந்திய ரூபாவை பயன்படுத்துவதற்கு அரசாங்கம் அவதானம் செலுத்தி வருகின்றது.

இதற்கமைய, முட்டை இறக்குமதியின் போது டொலரை செலவிடாமல், இந்திய ரூபாவை பயன்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

அதேநேரம், முட்டை இறக்குமதிக்காக சர்வதேச விலை அடிப்படையிலான விலை மனு கோரல் நடவடிக்கை இன்றுடன் இறுதி செய்யப்படும் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்ணான்டோ அண்மையில் தெரிவித்தார்.

முட்டை இறக்குமதி தொடர்பான பணிகள் அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின் ஊடாக முன்னெடுக்கப்படும் நிலையில், 20 மில்லியன் முட்டைகளை இறக்குமதி செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக அதன் தலைவர் ஆசிரி வலிசுந்தர தெரிவித்துள்ளார்.

அதில் முதல் கட்டமாக 5 மில்லியன் முட்டைகள் இறக்குமதி செய்யப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கமைய, இந்தியாவின் தமிழ்நாட்டில் இருந்து முட்டைகளை இறக்குமதி செய்ய திட்டமிட்டுள்ளதால், டொலருக்கு பதிலாக இந்திய ரூபாவை பயன்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: