கிராம அலுவலகர் பிரிவு மட்டத்திலிருந்து சகல தரப்பினரையும் இணைத்து பொருளாதாரத்தை வலுப்படுத்த தேசிய வேலைத்திட்டம் – பிரதமர் தினேஸ் குணவர்தன தெரிவிப்பு!

Thursday, September 8th, 2022

கிராம அலுவலகர் பிரிவு மட்டத்திலிருந்து சகல தரப்பினரையும் இணைத்து நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்கு தேவையான தேசிய வேலைத்திட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக பிரதமர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

கிராம அலுவலகர் பிரிவு மற்றும் கிராமிய பொருளாதார மறுசீரமைப்பு கேந்திரமாக உடனடியாக வலுவூட்டும் தேசிய வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதற்காக, நாடுபூராகவும் உள்ள மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட அரச சேவையாளர்களை தெளிவுபடுத்தும் நிகழ்வில் கலந்துக் கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

நாடுபூராகவும் பொருளாதார மறுசீரமைப்பு கேந்திர நிலையங்களை, இரண்டும் வாரத்திற்குள் அமைக்கவுள்ளதாக மாவட்ட செயலாளர்கள் பொதுநிர்வாக உள்நாட்டு அலுவல்கள், உள்ளுராட்சி மன்றங்கள் அமைச்சு செயலாளர் ஆகியோர், பிரதமர் தினேஸ் குணவர்தனவிடம் உறுதியளித்துள்ளனர்.

இதன்படி, குறித்த குழு எதிர்வரும் 19 ஆம் திகதிக்கு முன்னர் ஸ்தாபித்து நிறைவுறுத்த உள்ளதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

கிராம அலுவலகர் பிரிவு மட்டம் மற்றும் பிரதேச செயலாளர் பிரிவுகள் மட்டத்தில் பொருளாதார மறுசீரமைப்பு ஸ்தாபிக்கப்படவுள்ளதுடன், அதன் பணிகள், தேசிய குழுவொன்றின் ஊடாக கண்காணிக்கப்படவுள்ளது.

பல்வேறுப்பட்ட இடையூறுகளை புறந்தள்ளி நாட்டின் நிதியை தேசத்தின் நலன் மற்றும் மக்களின் நலன்புரிக்காக பயன்படுத்த வேண்டியது சகல அரச அதிகாரிகளினதும் பொறுப்பு என பிரதமர் தினேஸ் குணவர்தன வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: