கிராமத்தை வழிநடத்தும் பொறுப்பு கிராம மக்களையே சாரும் – ஈ.பி.டி.பியின் வலி.கிழக்கு நிர்வாக செயலாளர் இராமநாதன் ஐங்கரன்!

Monday, June 13th, 2016

கிராம மக்களை வழிநடாத்துகின்ற மக்கள் பிரதிநிதிகள் வெளிப்படைத் தன்மையுடனும் விட்டுக்கொடுப்புடனும் வழிநடத்திச் செல்லவேண்டும். அவ்வாறு செயற்படுவதன் ஊடாகவே கிராமத்தை வளர்ச்சிப்பாதைக்கு கொண்டு செல்வதுடன் அவர்களை ஓரணியில் திரட்டமுடியும் என ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் வலிகாமம் கிழக்கு பிரதேச நிர்வாக செயலாளர் இராமநாதன் ஐங்கரன் தெரிவித்துள்ளார்.

உரும்பிராய் தெற்கு செல்வபுரம் உதயசூரியன் முன்பள்ளி மாணவா்களும் சிவபூரிஸ்வரா் அறநெறிப் பாடசாலை மாணவா்களும் இணைந்து நடத்திய வருடாந்த விளையாட்டு விழா நிகழ்வு  நேற்றையதினம் (12) சனசமூக நிலையத் தலைவா் கிருபாகரன் தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்துகொண்ட ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் வலிகாமம் கிழக்கு பிரதேச நிர்வாக செயலாளர். இராமநாதன் ஐங்கரன் உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது-

ஒரு கிராமத்தில் வாழுகின்ற மக்கள் அந்தக் கிராமத்தின் வளர்ச்சிக்காக வியர்வை சிந்தி உழைப்பதற்கு முன்வரவேண்டும். அவர்களது அத்தகைய வருகை அழிவிற்காகவோ அல்லது இழப்பிற்காகவோ அல்லாது அபிவிருத்திக்காகவும் தங்களுடைய சிறந்த எதிர்காலத்திற்காகவும் அமையவேண்டும். அவ்வாறு வியர்வை சிந்துவதனூடாகவே குடும்பம் மட்டுமன்றி உங்களது கிராமமும் பிரதேசமும் முன்னேற்றத்தைக் காணமுடியும்.

இந்த நடைமுறைகள் கிராமங்களில் இருக்குமானால் கிராமங்கள் வளர்ச்சி அடைவதுடன் மக்களிற்கும் ஒரு சிறந்த எதிர்காலத்தை உருவாக்கிக்கொள்ள முடியும். எனவே நீங்கள் அனைவரும் ஒற்றுமையானவர்களாக செயற்பட்டு உங்களது எதிர்காலத்தை வளமாக்கிக் கொள்ளவேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும் என அவர் தெரிவித்துள்ளார்.

கனடா வாழ் ஆனந்தி ரஞ்சன் தம்பதிகளின் அனுசரணையுடன் உரும்பிராய் தெற்கு செல்வபுரம் உதயசூரியன் முன்பள்ளி மாணவா்களும் சிவபூரிஸ்வரா் அறநெறிப் பாடசாலை மாணவா்களும் இணைந்து நடத்திய வருடாந்த விளையாட்டு விழா நேற்றையதினம் நடைபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்வில் உரும்பிராய் தெற்கு கிராம உத்தியோகத்தா் அன்ரன் தீபராஸ் இளைப்பாறிய உரும்பிராய் இந்துக் கல்லூரி உப அதிபர் திருமதி.மதுரநாயகி திருநாவுக்கரசு முன்பள்ளி முகாமைத்துவக் குழு செயலாளர் திருமதி.மு.விஜயகாந்தா ஆகியோர் கலந்துகொண்டு  சிறப்பித்திருந்தனர்.

நிகழ்வின் இறுதியில் போட்டிகளில் பங்கெடுத்த சிறார்களுக்கு அதிதிகள் பரிசில்களை வழங்கிவைத்தனர்.

4

5

6

3

7

Related posts: