காவற்துறை அதிகாரிகள் இடமாற்றம்!

தேசிய காவற்துறை ஆணைக்குழுவின் அனுமதியின் அடிப்படையில், சிரேஷ்ட காவற்துறை அத்தியட்சிகர்கள் 4 பேரும், காவற்துறை அதிகாரிகள் 33 பேரும், உதவி காவற்துறை அதிகாரிகள் 24 பேரும் இடமாற்றம் செய்யப்படவுள்ளனர்.
அதற்கு மேலதிகமாக பிரதான காவற்துறை பரிசோதகர்கள் 13 பேரும், காவற்துறை பரிசோதகர்கள் 9 பேரும் இடமாற்றப்படவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த இடமாற்றங்கள் அனைத்தும் தேசிய காவற்துறை ஆணைக்குழுவின் அனுமதியுடன் இடம்பெறுவதாக காவற்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
Related posts:
திருகோணமலையில் வறிய மாணவர்களுக்கு ஈ.பி.டி.பியினரால் துவிச்சக்கரவண்டிகள் வழங்கிவைப்பு!
கொரோனாவிற்கு மத்தியில் மலேரியாவை முற்றுமுழுதாக இல்லாதொழிக்கும் மருந்து கண்டுபிடிப்பு!
பாடசாலைச் சீருடை விநியோகிக்கும் பொறுப்பு உள்நாட்டு ஆடை உற்பத்தியாளர்களுக்கு – அமைச்சரவை அங்கீகாரம்!
|
|