காலாவதியான சாரதி அனுமதிப் பத்திரங்களுக்கு சலுகைக் காலம் நீடிப்பு – அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவிப்பு!

Wednesday, July 27th, 2022

காலாவதியான சாரதி அனுமதிப்பத்திரத்திரங்களுக்கான செல்லுபடியாகும் காலத்தை நீடிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதற்கென அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்க இருப்பதாக அமைச்சவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன குறிப்பிட்டார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக மாநாட்டில் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

காலாவதியான சாரதி அனுமதிப்பத்திரங்களுக்கு சலுகைக் காலம் வழங்குவது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படுமா? என்ற கேள்விக்கு ” இது தொடர்பில் அமைச்சின் செயலாளருக்கு ஆலோசனை வழங்கியுள்ளேன்.

எதிர்வரும் தினங்களின் அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்.இது தொடர்பில் சிக்கல் உள்ளதை அறிவேன்” என்றும் அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: