காலநிலை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள செய்தி..!

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இன்றுமுதல் (20) மழையுடனான காலநிலை தொடருமென வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதன்படி நாட்டின் கிழக்கு, வடமத்திய, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் மழை பெய்யும் சாத்தியக்கூறுகள் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
சபரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் இன்று (20) பிற்பகல் 2 மணிக்கு பின் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமெனவும் வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கிழக்கு, ஊவா, வட மற்றும் வடமேல் மாகாணங்களிலும் ஹம்பாந்தொட்டை மற்றம் மாத்தளை மாவட்டங்களின் சில இடங்களிலும் மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளதாக குறித்த திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
Related posts:
மோட்டார் சைக்கிள்களை பதிவதற்கு இன்னும் 4 மாத கால அவகாசம்!
புகையிரத கட்டணம் அதிகரிக்கப்படாது - ரயில்வே பொது முகாமையாளர்!
யாழ் மாவட்டத்தில் தொடர்ந்தும் கொரோனா தொற்றின் அச்சுறுத்தல் அதிகரிப்பு - பொதுமக்கள் அவதானமாக செயற்பட ...
|
|