காணாமல் போன உறவுகளுக்காக முற்றாக முடங்கியது வடக்கு வடமாகாணம்!

Monday, February 25th, 2019

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரது உறவுகளால் முன்னெடுக்கப்பட்டுள்ள பூரண ஹர்த்தால் போராட்டம் காரணமாக வடக்கு மாகாணம் இன்று திங்கட்கிழமை முழுமையாக முடங்கியுள்ளது.

நகர் பகுதிகளில் உள்ள வர்த்தக மற்றும் போக்குவரத்துச் சேவைகள் எவையும் இடம்பெறாததுடன் அலுவலகங்கள், பாடசாலைகளும் நடைபெறாது காணப்படுகின்றது

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கோரி வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரைத் தேடும் உறவுகளால் ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் இரண்டு ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டும், ஐ.நா. மனித உரிமைகள் சபையில் இலங்கைக்கு கால அவகாசம் வழங்கக் கூடாது என்று வலியுறுத்தியும் இன்று வடக்கு மாகாண முழுவதும் பூரண ஹர்த்தால் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, இன்று காலை 8.30 மணிக்கு கிளிநொச்சியில் மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டமும் முன்னெடுக்கப்படவுள்ளது.

இந்தப் போராட்டத்துக்கு தமிழ் மற்றும் முஸ்லிம் அரசியல் கட்சிகள் ஆதரவு வெளியிட்டுள்ளன. சிவில் அமைப்புக்களும் தாங்கள் ஒத்துழைப்பு வழங்குகின்றன். இதனால் வடக்கு மாகாணத்தில் இன்று போக்குவரத்துச் சேவைகள், வர்த்தக, வணிக, வங்கிச் சேவைகள் இடம்பெறாது காணப்படுகின்றன.

Related posts: