அகதிகளின் பிள்ளைகளுக்கு கல்வியை பெறும் உரிமை – இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர்

Monday, October 2nd, 2017

அகதிகளுக்கு உணவை போலவே கல்வியை பெறும் உரிமையும் இருப்பதாக இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் சட்ட கலாநிதி பிரதீபா மஹாநாமஹேவா தெரிவித்துள்ளார்.

அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் உயர்ஸ்தானிகராலயத்துடன் இணக்கப்பாடு ஒன்றுக்கு வந்திருந்தால்,வெளிநாட்டு அகதிகளின் பிள்ளைகளுக்கு இலங்கையில் கல்வியை பெறும் உரிமை உள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் அகதிகளுக்கு வரையறையான நிபந்தனைகள் உள்ளன. சுதந்திரமாக பயணங்களை மேற்கொள்ளும், வாக்களிக்கும் உரிமை என்பன அகதிகளுக்கு இல்லை.கல்வியை பெற்றுக்கொள்ள அகதிகளுக்கு எந்த தகுதியும் அவசியமில்லை. முகாம்களுக்குள் கல்வியை வழங்குவது அரசாங்கத்தின் பொறுப்பு.

அகதிகள் தொடர்பாக செயற்படும் போது இலங்கையின் வெளிநாட்டு கொள்கை குறித்தும் கவனத்தில் கொள்ள வேண்டும் எனவும் மஹாநாமஹேவா குறிப்பிட்டுள்ளார்.ரோஹிங்யா அகதிகளின் பிள்ளைகள் இலங்கையின் பாடசாலைகளில் சேர்க்கப்பட்டுள்ளமை தொடர்பாக சிலர் அண்மையில் குற்றம் சுமத்தியிருந்தனர். இதற்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

Related posts:


அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கு ஆசிவேண்டி கரவெட்டி மேற்கு, முதலிகோவில் கிராமத்து மக்களால் சிறப...
டொலர் நெருக்கடிக்கு நாங்கள் காரணமில்லை - மக்களிற்கு ஜனநாயகத்தை உறுதி செய்யும் விதத்திலேயே ஆட்சிசெய்க...
கருத்து வேறுபாடுகளை சகித்துக்கொள்வதில் பல வருடம் எனக்கு உள்ளது அனுபவமுண்டு - பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ...