காணாமற் போனோர் சட்டமூலத்தில் திருத்தம் – அமைச்சரவை அனுமதி!

Thursday, February 9th, 2017

 

காணாமல் போனோர் தொடர்பான சட்டத்தில் அடங்கியிருந்த சரத்துக்களில் மாற்றத்தை கொண்டுவர  அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இதற்கமைய காணாமற்போனோர் தொடர்பிலான காரியாலயத்தை அமைத்து, நிர்வகித்தல் மற்றும் பணிகளை நிறை வேற்றுதலுக்கான சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

காணாமல் போனோர் தொடர்பான சட்டமானது போரில் வெற்றிபெற்ற  படையினருக்கு பாதகமானதெனவும் அவர்களைக் காட்டிக்கொடுக்கின்றது எனவும் தெரிவிக்கப்பட்டு வந்த நிலையில் அதில் மாற்றங்களை மேற்கொள்ள அரசாங்கம் தீர்மா னித்துள்ளது. காணாமற்போனோருக்கான சட்டத்தில் கைச்சாத்திட்டு வர்த்தமானியில் பிரசுரிப்பதை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன காலம் தாழ்த்தி வந்த நிலையில் தற்போது மாற்றம் மேற்கொள்ளப்படவுள்ளது.

காணாமற்போனோர் அல்லது காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பிலான விசாரணைகளை மேற்கொள்வதற்காக விசேட காரியாலயம் ஒன்றை அமைக்கும் சட்டத்துக்கு, 2016 ஆம் ஆண்டு ஒகஸ்ட் மாதம் 23 ஆம் திகதி நாடாளுமன்றில் அனுமதி வழங்கப்பட்டது.

அதற்கிணங்க தமது பணிகளை நிறைவேற்றுவதற்காக ஒரு நபருடனோ அல்லது ஏதேனும் ஒரு அமைப்புடனோ ஒப்பந்த ங்களை மேற்கொள்ள இந்த காரியாலயத்துக்கு அதிகாரம் உள்ளது என்று அந்த சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ள 11 ஆவது பிரிவின் (அ) உறுப்புரையை அகற்றுவதற்கே தற்போது யோசனைகள் முன்வை க்கப்பட்டுள்ளன.

f4dd5c1a7bbb150619bc2bac1c3d9648_XL

Related posts: