காணாமற்போனோர் தொடர்பான வட மாகாணத்தில் சாட்சிப் பதிவுகள் நிறைவு!

வட மாகாணத்தில் காணாமற்போனோர் தொடர்பில் சாட்சியங்களைப் பெற்றுக் கொள்ளும் நடவடிக்கைகள் நிறைவுக்கு வந்துள்ளதாக காணாமற்போனோர் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
காணாமற்போனோர் தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணை செய்வதற்கு குழுவொன்று அமைத்து நாளை (11) முதல் விசாரணைகளை முன்னெடுப்பதற்கும் தீர்மானித்துள்ளதாக காணாமற்போனோர் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் செயலாளர் எச்.டீ குணதாஸ தெரிவித்துள்ளார்.
இதைத் தொடர்ந்து கிழக்கு மாகாணத்திற்கான சாட்சி விசாரணைகளை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாகவும் காணாமற்போனோர் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
முச்சக்கரவண்டி மீது பெற்றோல் குண்டு தாக்குதல்: இரு முச்சக்கரவண்டிகள் எரிந்து நாசம்!
வெலிசறை கடற்படை சிப்பாய் ஒருவரால் முல்லைத்தீவில் 71 கடற்படையினர் தனிமைப்படுத்தப்பட்டனர் - முல்லைத்தீ...
நகர அபிவிருத்தித் திட்டத்தின் எஞ்சியுள்ள பணிகளை விரைவில் முடிக்க நடவடிக்கை எடுங்கள் - அமைச்சர் பிரசன...
|
|