காங்கேசன்துறை நடேஸ்வராக் கல்லூரியின் கட்டடத் திறப்பு விழா பிற்போடப்பட்டுள்ளது

நாளை ஞாயிற்றுக்கிழமை(29) இடம்பெறவிருந்த யாழ். காங்கேசன்துறை நடேஸ்வராக் கல்லூரியின் கட்டடத் திறப்பு விழா தவிர்க்க முடியாத காரணங்களால் பிற்போடப்பட்டுள்ளதாகக் கல்லூரி அதிபர் தெரிவித்துள்ளார்.
கடந்த 12.03.2017 இல் ஜனாதிபதியினளால் மீளவும் கையளிக்கப்பட்ட கல்லூரியின் இரு கட்டடங்களும் புனர் நிர்மாணம் செய்யப்பட்ட நிலையில் நாளை திங்கட்கிழமை முற்பகல்-11.30 மணியளவில் அமைச்சர் டி. எம். சுவாமிநாதனால் திறந்து வைக்கப்படுவதற்குத் தீர்மானிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையிலேயே குறித்த கட்டடத் திறப்பு விழா பிற்போடப்பட்டுள்ளதாகக் கல்லூரி அதிபர் மேலும் தெரிவித்துள்ளார்.
Related posts:
முச்சக்கர வண்டிகளின் மீற்றர் தொடர்பான சட்டமூலம் விரைவில்!
திடீரென தீப்பற்றி எரிந்த மகிழுந்து : யாழில் பதற்றம்!
நவம்பர் 06 ஆம் திகதிவரை மழை பெய்யும் வாய்ப்புள்ளது - யாழ்.பல்கலைக்கழகத்தின் புவியியல்துறை சிரேஸ்ட வி...
|
|