இரும்பு கம்பியின் விலை சடுதியாக வீழ்ச்சி – சிமெந்தின் விலையும் குறைவடைந்துள்ளதாக தெரிவிப்பு!

Sunday, November 13th, 2022

கடந்த காலங்களில் பாரிய அளவில் அதிகரிப்பை பதிவு செய்திருந்த இரும்பு கம்பியின் விலை தற்போது வீழ்ச்சியடைந்துள்ளது.

இதன்படி, ஒரு டன் கம்பியின் விலை ஒரு இலட்சம் ரூபாவால் குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த மாதம் 5 இலட்சத்து 75 ஆயிரம் ரூபாவாக காணப்பட்ட ஒரு டன் கம்பியின் விலை தற்போது 4 இலட்சத்து 75 ஆயிரம் ரூபாவாக குறைவடைந்துள்ளது.

இதன்படி, 2000 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்ட 10 மில்லிமீற்றர் இரும்பு கம்பி, தற்போது 1635 ரூபாவுக்கு விற்கப்படுகிறது. 2700 ரூபாவுக்கு விற்கப்பட்ட 12 மில்லிமீற்றர் கம்பி, 2395 ரூபாவுக்கு விற்கப்படுகிறது. அத்துடன் 16 மில்லிமீற்றர் கம்பியின் விலை 4325 ரூபாவாக குறைவடைந்துள்ளது.

இதேவேளை 50 கிலோகிராம் நிறையுடைய சிமெந்து ஒரு மூடை தற்போது சந்தையில் 2975 ரூபாவுக்கு விற்கப்படுகிறமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts: