காங்கேசன்துறை தனிமைப்படுத்தல் நிலையத்தில் மேலும் 10 பேருக்கு கொரோனா பரிசோதனை : இன்று மாலை முடிவுகள் – யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர்!

காங்கேசன்துறை தனிமைப்படுத்தல் நிலையத்தில் உள்ள மேலும் 10 பேருக்கு கொரோனா தொற்று தொடர்பான பரிசோதனை நடாத்தப்படவுள்ள நிலையில் இன்று மாலை முடிவுகள் வெளியாகும். என யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி கூறியுள்ளார்.
இது தொடர்பாக மேலும் அவர் கூறுகையில், காங்கேசன்துறை தனிமைப்படுத்தல் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டிருந்த 20 பேரில் முதல் 10 பேருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் 3 கொரோ தொற்றுள்ளவர்கள் அடையாளப்படுத்தப்பட்டிருக்கின்றனர்.
இந்நிலையில் மிகுதி 10 பேருக்கு ஆய்வு நடாத்தப்படவிருக்கின்றது. அவர்கள் தொடர்பான அறிக்கை இன்று மாலை வெளியாகும். என பணிப்பாளர் மேலும் கூறியுள்ளார்.
Related posts:
72 குண்டுகள் முழங்க அரச மரியாதையுடன் எஸ்.பி.பி யின் உடல் நல்லடக்கம்!
வீட்டில் உயிரிழக்கும் கொரோனா நோயாளிகளால் ஆபத்து – எச்சரிக்கிறது பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம்!
27 ஆம் திகதி நள்ளிரவு வரையில் எந்தவொரு பயணிகள் புகையிரதங்களும் சேவையில் ஈடுபடாது!
|
|