களனிதிஸ்ஸ மின்பிறப்பாக்கி மீண்டும் தேசிய மின் கட்டமைப்பில் இணைப்பு!
Sunday, February 13th, 2022
270 மொகாவொட் மின்சார உற்பத்தி இடம்பெறுகின்ற கெரவலப்பிட்டி மின்னுற்பத்தி நிலையத்தின் மேற்கு முனையம் தொழிநுட்ப கோளாறு காரணமாக நேற்றிரவு செயலிழந்துள்ளது.
அதேநேரம், 130 மொகாவொட் மின்சார உற்பத்தி இடம்பெறுகின்ற, களனிதிஸ்ஸ சொஜிஸ்ட் மின்னுற்பத்தி நிலைய மின் பிறப்பாக்கியும் நேற்று செயலிழந்தது.
இதன் காரணமாக, நாட்டின் பல பாகங்களில் குறுகிய கால மின் துண்டிப்பு எதிர்பார்க்கப்பட்டதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்னாயக்க நேற்றிரவு தெரிவித்துள்ளார்.
எவ்வாறிருப்பினும், செயலிழந்திருந்த களனிதிஸ்ஸ சொஜிஸ்ட் மின்னுற்பத்தி நிலைய மின்பிறப்பாக்கி, நேற்றிரவு புனரமைக்கப்பட்டு தேசிய மின்கட்டமைப்புடன் இணைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது..
000
Related posts:
பொது போக்குவரத்து முறைமை தொடர்பாக ஆராய புதிய குழு உருவாக்கம்!
யாழ். நவீன சந்தைக் கட்டடத் தொகுதி வர்த்தக நிலைய கொத்தணியிலிருந்து மேலும் 54 பேருக்கு கொரோனா தொற்று!
மே 9 சம்பவங்கள் தொடர்பில் இதுவரை 1,500 பேர் கைது - பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அறிவிப்பு!
|
|
|


