கல்வி நிறுவனங்களை ஒழுங்குபடுத்துவதற்கான திட்டங்கள் தயாரிப்பு!

நாட்டிலுள்ள பல்வேறு கல்வி நிறுவனங்களை ஒழுங்குபடுத்துவதற்கான திட்டங்கள் தயாரிக்கப்பட்டு வருவதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.
தனியார் கல்வி நிறுவனங்களில் கல்வி பயிலும் மாணவர்கள் மீதான பல்வேறு தொந்தரவுகளை கவனத்திற்கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகார சபையின் தலைவர் நடாஷா பாலேந்திரன் குறிப்பிட்டார்.
இத்தகைய கல்வி நிறுவனங்கள் தொடர்பில் முதல்கட்டமாக ஆய்வொன்றை மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். குறிப்பாக தனியார் கல்வி நிறுவனங்களின் பதிவுகள், அவற்றின் தரம், கல்வி பயில்கின்ற மாணவர்களின் எண்ணிக்கை மற்றும் வசதிகள் குறித்து முக்கிய கவனம் செலுத்தப்படும் என்றும் சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் மேலும் கூறினார்.
Related posts:
ஓகஸ்ட்டில் இரண்டு இலட்சம் குடும்பங்களுக்கு சமுர்த்தி நிவாரணம்!
பயணக் கட்டுப்பாடு குறித்து அறிவியல் ரீதியாகவே முடிவு செய்ய வேண்டும் - பேராசிரியர் நீலிகா மளவிகே சுட...
ஹட்டனில் பேருந்து விபத்து - ஒருவர் பலி - 16 பேர் காயம்!
|
|