கல்வி அதிகாரிகள் சிலருக்கு எதிராக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு!

கல்வித்துறை சார்ந்த சில உத்தியோகத்தர்கள் தமக்குரிய அதிகாரங்களைப் பயன்படுத்தி பிள்ளைகளுக்கான கல்வி உரிமைகளை மீறுகின்றனர் என தேசிய கல்வி ஊழியர் சங்கம், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாட்டைத் தாக்கல் செய்துள்ளது.
சில உத்தியோகத்தர்கள் பாடசாலையை மூடுமாறு அதிபர்மாருக்கு அழுத்தம் கொடுத்திருக்கிறார்கள் என்று தேசிய கல்வி ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது.
பாடசாலைகளுக்குச் செல்ல வேண்டாமென ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் அச்சுறுத்தல் விடுத்திருக்கிறார்கள். இதனை தாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம் என சங்கத்தின் பொதுச் செயலாளர் பிரேமசிறி ரத்னாயக்க தெரிவித்துள்ளார்
Related posts:
பொலிஸாரின் பிணை மனு நிராகரிப்பு!
இந்து மக்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த விஜயதசமி நல் வாழ்த்துகள் - விஜயதசமி வாழ்த்துச் செய்தியி...
ஜனாதிபதி ரணிலினால் பரிந்துரை - முடிசூட்டு விழாவுக்கு முதல் நாளில் பொதுநலவாய கூட்டத்தில் சார்ள்ஸ்!!
|
|