கல்வியை நவீனமயப்படுத்த உலக வங்கி நிதியுதவி!

Tuesday, May 1st, 2018

நாட்டின் கல்வி நடவடிக்கைகளை நவீனமயப்படுத்தும் அரசாங்கத்தின் திட்டத்திற்கு உலக வங்கி நிதி உதவியளிக்க முன்வந்துள்ளது.

10 கோடி அமெரிக்க டொலர்களை உலக வங்கியின் நிறைவேற்று இயக்குனர்கள் கடன் அடிப்படையில் வழங்குவதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இலங்கை சமூகத்தவர் மற்றும் அதன் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தும் வகையில் கல்வி முறைமையை அமைப்பதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. அதற்கு ஏற்ப பாடவிதானங்களைமேற்கொள்வதன் மூலம் மாணவர்கள் தகுந்த முன்னேற்றகரமான வேலை வாய்ப்புக்களை பெறமுடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts: