கல்வியியற் கல்லூரி அனுமதிக்கான நேர்முகப்பரீட்சை!

Thursday, March 1st, 2018

மார்ச் 12 ஆம் திகதி கல்வியியற் கல்லூரிகளுக்கு மாணவர்களைச் சேர்த்துக்கொள்வதற்கான நேர்முகப்பரீட்சை ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

2015ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரப்பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் 2017ஆம் ஆண்டின் கல்வி நடவடிக்கைகளுக்காக வர்த்தமானி அறிவித்தலுக்கமைய மாவட்ட அடிப்படையில்மாணவர்கள் கல்வியில் கல்லூரிக்கு அனுமதிக்கப்படவுள்ளனர்.

மாவட்டமட்டத்தில் சேர்த்துக்கொள்ளப்படவுள்ள மாணவர்களின் எண்ணிக்கையிலும் பார்க்க சுமார் மூன்று மடங்கினர் இம்முறை அனுமதிக்காக விண்ணப்பித்துள்ளனர். இவர்களின் தகுதிக்குஅமைவாக தேசிய கல்வியற் கல்லூரியில் நேர்முகப்பரீட்சைகள் ஆரம்பமாகவுள்ளன.

நாட்டிலுள்ள 19 கல்வியில் கல்லூரிகளுக்கு 27 கற்கைநெறிகளுக்காக 4ஆயிரத்து 745 பேர் சேர்த்துக்கொள்ளப்படவுள்ளனர்.

Related posts: