கலைப்பீட கற்றல் நடவடிக்கைகளை மீள் ஆரம்பிக்குமாறு மாணவர் ஒன்றியம் கோரிக்கை!

மறு அறிவித்தல் வரும் வரை மூடப்பட்டுள்ள கலைப்பீட மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகளை மீள ஆரம்பிக்குமாறு மாணவர் ஒன்றியம் கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பில் யாழ்பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
பல்கலைக்கழகத்தில் கடந்த 10ஆம், 11ஆம் திகதிகளில் நிர்வாகத்திற்கும், மாணவர் ஒன்றியத்திற்கும் இடையில் ஏற்பட்ட முறுகல் நிலையால் ஏற்பட்ட சேதங்களுக்கு உரிய முறையில் விசாரணை நடத்த மாணவர் ஒன்றியமும் ஒத்துழைப்பு வழங்கும் எனவும் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, சம்பவம் தொடர்பில் மாணவர்களிடையே விசாரணை மேற்கொண்டால் அதனை மாணவர் நலன் கருதி குறுகிய காலத்திற்குள் மேற்கொள்ளுமாறும், தனிப்பட்ட ரீதியில் மாணவர்களை தண்டிப்பதை விடுக்குமாறும் மாணவர் ஒன்றியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
அரிசியை இறக்குமதி செய்ய அரசாங்கம் முடிவு!
நாட்டில் கொரோனா மரணங்கள் தொடர்ந்தும் பதிவு - ஒரே நாளில் 1531 பேருக்கு தொற்றுறுதி!
விலைகள் அதிகரிக்கும் பட்சத்தில் அதற்கான மாற்று வழிகளை அரசாங்கம் மேற்கொள்ளும் - வர்த்தகத்துறை அமைச்ச...
|
|