கலால் திணைக்களத்தின் வருமானம் 12.2% குறைந்துள்ளது – கலால் திணைக்களத்தின் தெரிவிப்பு!

கலால் திணைக்களத்தின் கூற்றுப்படி, கடந்த வருடத்தின் முதல் இரண்டு மாதங்களுடன் ஒப்பிடுகையில், இந்த வருடத்தின் முதல் இரண்டு மாதங்களில் கலால் திணைக்களத்தின் வருமானம் 12.2% குறைந்துள்ளது.
2022 ஆம் ஆண்டின் முதல் இரண்டு மாதங்களில் கலால் வருமானம் 28.6 பில்லியன் ரூபாவாகும். இந்த வருடத்தின் முதல் இரண்டு மாதங்களில் அந்த வருமானம் 25.1 பில்லியன் ரூபாவாக குறைந்துள்ளது.
இந்த ஆண்டு ஜனவரி 1ம் திகதி முதல் மதுபானத்திற்கு விதிக்கப்பட்ட வரி 20% அதிகரிக்கப்பட்டதாலும், மதுபானத்தின் விலை உயர்வு காரணமாகவும் இதன் நுகர்வு குறைந்துள்ளது.
இதன் காரணமாக, சட்டப்பூர்வ மது விற்பனை குறைந்துள்ளதால், கலால் வரி வருவாய் குறைந்துள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
மாணவி வித்தியா கொலை: சந்தேகநபர் ஒருவர் அரசதரப்பு சாட்சியாக மாற்றம்?
நிகழ்வுகளுக்கு செனட்டின் அனுமதி தேவை – அமைச்சர் லக்ஸ்மன் கிரியல்ல!
நாடாளுமன்ற நிலையியற் கட்டளைகளில் மாற்றம் - சபாநாயகர்!
|
|