கரைதுறைப்பற்றில் அதிக வீதிகள் புனரமைக்கப்பட வேண்டும் – பிரதேச செயலர்!
Tuesday, October 4th, 2016
கரைதுறைப்பற்று பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் அதிகளவான வீதிகள் புனரமைக்க வேண்டிய நிலையில் காணப்படுவதாக பிரதேச செயலர் குணபாலன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், கரைதுறைப்பற்று பிரதேசத்திலுள்ள 90.25கிலோ மீற்றர் நீளமான “ஏ” தர மற்றும் “பி” தர வீதிகளில் 89.38 கிலோ மீற்றர் வீதி புனரமைக்கப்பட்டுள்ளதுடன் 0.8மூ கிலோ மீற்றர் வீதி புனரமைக்கப்படவில்லை. மேலும் 99.41 கிலோ மீற்றர் நீளமான “சி” தர வீதிகளில் 8.83 கிலோ மீற்றர் வீதிகள் மாத்திரமே புனரமைக்கப்பட்டுள்ளன. ஏனைய 90.58 கிலோ மீற்றர் வீதிகள் புனரமைக்கப்படாமல் உள்ளன. இவை தவிர கரைதுறைப்பற்று பிரதேச சபைக்கு சொந்தமான முல்லைத்தீவு உப அலுவலகத்தின் கீழ் 39.15 கிலோ மீற்றர் நீளமான வீதிகளும் முள்ளியவளை உப அலுவலகத்தின் கீழ் 66.80 கிலோ மீற்றர் வீதிகளும் செம்மலை உப அலுவலகத்தின் கீழ்55 கிலோ மீற்றர் வீதிகளும் முள்ளிவாய்க்கால் உப அலுவலகத்தின் கீழ் 121.55 கிலோ மீற்றர் வீதிகளும் புனரமைக்க வேண்டிய தேவை காணப்படுகின்றது என்றார்.

Related posts:
|
|
|


