கருப்பு பட்டியலில் இருந்து இலங்கை உள்ளிட்ட ஆறு நாடுகள் நீக்கம் – நாளைமுதல் நாட்டுள்குள் பிரவேசிக்க அனுமதியளித்தது ஜப்பான்!

கொரோனா அச்சுறுத்தலை அடுத்து இலங்கை உள்ளிட்ட கருப்பு பட்டியலில் உள்ள 6 நாடுகளின் பயணிகளுக்கு ஜப்பான் நாட்டுக்குள் பிரவேசிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி, நாளை திங்கட்கிழமைமுதல் இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது.
அதற்கமைய, ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், இந்தியா, மாலைதீவு, நேபாளம் மற்றும் இலங்கை ஆகிய ஆறு நாடுகளுக்கே இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு தொடக்கத்தில் கொரோனா பரவலின் அதிகரிப்பினால் ஜப்பானின் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக சில நாடுகளுக்கு நாட்டுக்குள் பிரவேசிக்க தடை விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது
Related posts:
11 ஆயிரம் ரூபா மில்லியன் செலவில் AB39 வழுக்கையாறு புங்குடுதீவு குறிகாட்டுவான் வீதி இவ்வாண்டு புனரமைப...
கைத்தொழில் நிறுவனங்களில் தொழில்புரியும் பெண் பணியாளர்கள் தொடர்பில் இலங்கை தொழில் திணைக்கம் விடுத்துள...
ஐரோப்பிய ஒன்றியத் தூதுவருடன் பரந்த அளவிலான ஒத்துழைப்பு குறித்து வெளிநாட்டு அமைச்சர் பீரிஸ் கலந்துரைய...
|
|