தேருநர் இடாப்புக்களின் 2ஆவது வரைவு ஞாயிறுவரை காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் !
Friday, November 11th, 2016
தேருநர் இடாப்பு 2016 மீளாய்வுடன் தொடர்புடைய 2ஆவது வரைவு அனைத்து கிராம அலுவலர் அலுவலகங்கள் தோறும் மக்கள் பார்வைக்காகக் கடந்த 8ஆம் திகதி முதல் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
எதிர்வரும் 13ஆம் திகதிவரை காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் இந்த வரைவினை பொது மக்கள் பார்வையிட்டு பெயர்களில், அடையாள அட்டை இலக்கங்களில் காணப்படுகின்ற தவறுகள், இடாப்பில் உட்சேர்ப்பதற்காகப் பரிந்துரைக்கப்பட்ட பெயர்கள் மற்றும் உரிமைக் கோரிக்கைள் ஏற்றுக் கொள்ளப்பட்ட பெயர்கள் இதுவரையில் இடாப்பில் உட்சேர்க்கபடவில்லையாயின் அத்தகைய விடயங்கள் தொடர்பாக எதிர்வரும் 13ஆம் திகதிக்கு முன்பு தத்தம் கிராம அலுவலர் ஊடாக யாழ்.தேர்தல்கள் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்படல் வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts:
பரீட்சைக்கு விண்ணப்பம் கோரல்!
தடுப்பூசி பெற்றுக்கொள்ளாதவர்கள் ஆபத்தான நிலைகை்கு செல்ல கூடும் - கொழும்பு தேசிய வைத்தியசாலையின் வி...
வடமராட்சி கிழக்கு அம்பன் அமெரிக்கன் மிஷன் தமிழ கலவன் பாடசாலை மாணவர்களால் முன்னெடுக்கப்பட்ட போதை ஒழிப...
|
|
|


