வடமராட்சி கிழக்கு அம்பன் அமெரிக்கன் மிஷன் தமிழ கலவன் பாடசாலை மாணவர்களால் முன்னெடுக்கப்பட்ட போதை ஒழிப்பு தொடர்பான விழிப்புணர்வு பேரணி!
Tuesday, January 28th, 2025
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு அம்பன் அமெரிக்கன் மிஷன் தமிழ கலவன் பாடசாலை மாணவர்களால் போதை ஒழிப்பு தொடர்பான விழிப்புணர்வு பேரணி ஒன்று நேற்று (27) காலை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பாடசாலை முன்றலிலிருந்து ஆரம்பமான குறித்த மது ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி அம்பன் கிழக்கு வரை சென்று நிறைவடைந்துள்ளது.
பாடசாலை அதிபர் திரு கண்ணதாசன் தலமையில் ஆரம்பமான குறித்த மது ஒழிப்பு விழிப்புணர்வு பேரணியில் “ஒழிப்போம் ஒழிப்போம் மதுவை ஒழிப்போம், தவிர்ப்போம் தவிர்ப்போம் வெற்றிலை பாக்கை தவிர்ப்போம், காப்போம் காப்போம் சமூகத்தை காப்போம்” என்ற பல்வேறு கோஷங்களை எழுப்பி மாணவர்கள் தமது விழிப்புணர்வு பேரணியை நடத்தியிருந்தனர்.
000
Related posts:
நாளை கொடியேறுகிறது நல்லூர் கந்தன்!
மீண்டும் பொது போக்குவரத்து சேவை ஆரம்பம் - இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவிப்பு!
பாதுகாப்பற்ற சிறுவர்களின் விபரங்களை சேகரிக்க புதிய தரவுத்தளம் - சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை அறிவிப...
|
|
|


