கருத்தரங்கு, பிரத்தியேக வகுப்புக்கள் இன்று நள்ளிரவு முதல் தடை – பரீட்சைகள் திணைக்களம் அறிவிப்பு!
Tuesday, January 17th, 2023
கல்விப் பொது தராதர உயர்தரப் பரீட்சை எதிர்வரும் 23 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில், இன்று (17) நள்ளிரவுடன் மேற்படி பரீட்சை தொடர்பான பிரத்தியேக வகுப்புக்கள், கருத்தரங்குகள், செயலமர்வுகள் அனைத்தும் தடை செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதேவேளை, இன்று (17) நள்ளிரவுக்குப் பின்னர் கல்வி பொது தராதர உயர்தர பரீட்சையுடன் சம்பந்தப்பட்ட போஸ்டர்கள்,பெனர்கள், துண்டுப் பிரசுரங்கள் அச்சடிக்கப்பட்ட ஏனைய கையேடுகள் அனைத்தும் தடை செய்யப்படுவதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
இதனிடையே அடிப்படை பிரிவேனா இறுதிப்பரீட்சை விடைத்தாள்கள் மீள் பரிசீலனை தொடர்பான விண்ணப்பப் பத்திரங்கள் ஒன்லைன் மூலமாக மாத்திரம் ஏற்றுக் கொள்ளப்படும் எனப் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பரீட்சைகள் திணைக்களத்தின் www.doenets.lk என்ற இணையதளத்தில் தகவல்களை பெற்றுக் கொள்ள முடியும் என்றும் எதிர்வரும் பெப்ரவரி (15) வரை விண்ணப்பங்களை அனுப்ப முடியும் என்றும் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்டதக்கது
Related posts:
|
|
|


