கரிம உர உற்பத்தியை மேம்படுத்துவதற்கான அரச – தனியார் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்து!

Thursday, October 28th, 2021

இலங்கையில் கரிம உர உற்பத்தியை ஊக்குவிப்பதற்காக, அரச மற்றும் தனியார் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

இந்த ஒப்பந்தம், கொழும்பு கொமர்ஷல் உர நிறுவனத்திற்கும் போலந்து வணிக மூலதன நிறுவனமான ரெஜினா பெர்பீரியா நிதியத்திற்கும் (Regina Perpieria Funds) இடையில் மேற்கொள்ளப்பட்டது.

இதன் மூலம் வருடாந்தம் 200 ஆயிரம் மெட்ரிக் தொன் கரிம உரம் உற்பத்தி செய்யப்படவுள்ளன. இதற்காக முதலீடு செய்யும் தொகை 12.8 பில்லியன் ரூபா எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது..

இந்தக் கூட்டுப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் நிகழ்விற்கு இராஜாங்க அமைச்சர் ஷஷிந்திர ராஜபக்ஷ, விவசாயத்துறை அமைச்சின் செயலாளர் பேராசிரியர் உதித் ஜயசிங்க, கொழும்பு கொமர்ஷல் உர நிறுவனத்தின் தலைவர் மெத்சிறி விஜேவர்தன, ரெஜினா பர்பியூரியா ஃபண்ட்ஸ் நிறுவனத்தின் தலைவர் ஹியுபர்ட் ட்ரேபிக் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்

இதனிடையே உர உற்பத்திக்கு தேவையான கரிம கழிவுகள் கொழும்பு கொமர்ஷல் உர நிறுவனத்தினால் உற்பத்தி செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts: