நாட்டில் மீண்டும் மலேரியா ஆபத்து – மலேரியா தடுப்பு இயக்கம் எச்சரிக்கை!

Sunday, April 25th, 2021

நாட்டில் மீண்டும் மலேரியா நோய் நிலைமை ஏற்படுவதாக தேசிய மலேரியா தடுப்பு இயக்கம் அறிவித்துள்ளது.

நாட்டில் 2012ஆம் ஆண்டின் இறுதியில் மலேரியா நோயாளர் ஒருவர் அடையாளம் காணப்பட்டிருந்தார்.

இதனையடுத்து மூன்று வருடங்களுக்கு மலேரியா நோயாளர் எவரும் இனங்காணப்படாத நிலையில் 2016ஆம் ஆண்டு நாட்டில் மலேரியா முற்றாக ஒழிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

எவ்வாறாயினும் கடந்த ஆண்டு நாட்டின் பல பகுதிகளில் மலேரியா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் நேற்று ஊடகங்களுக்கு கருத்துரைத்த பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் விசேட வைத்தியர் எஸ். எம். ஆனல்ட், மக்கள் இது தொடர்பில் அவதானமாக செயற்பட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

மலேரியா நோயை பரப்பக் கூடிய நுளம்பு யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா பகுதியில் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: