கம்பரலிய திட்டத்தில் மோசடி: வடமராட்சி மக்கள் ஆதங்கம்!

Saturday, April 13th, 2019

மக்கள் அதிகம் பாவனையில் இருக்கம் வீதியை செப்பனிடாது ஒரு சிலரது விருப்புக்களுக்கு  அமைய பருத்தித்துறை பிரதேச சபையின் ஆளுகைக்குள் உள்ள வீதியான சாத்திரியார் வீதி முன்மொழியப்பட்டுள்ள சம்பவத்தால் குறித்த பகுதி மக்கள் கடும் விசனம் அடைந்துள்ளதுடன் துறைசார் தரப்பினரிடம் இதற்கான காரணத்தை தெளிவுபடுத்தும்படியும் கோரிக்கை விடுத்ததுள்ளனர்.

தற்போது மத்திய அரசின் ஆதரவுடன் முன்னெடுத்துவரப்படும் கம்பரலி திட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பினரின் விருப்பு வெறுப்புக்களுக்கு அமையவே திட்ட முன்மொழிவுகள் நடைபெற்று வருகின்றன. இதனால் மக்களது அவசர தேவைகள் பல புறக்கணிக்கப்பட்டு வரும் நிலை காணப்படுகின்றது.

அதுமட்டுமல்லாது குறித்த கம்பரலிய திட்டமானது பல மேசடிகள் நிறைந்ததாகவும்  காணப்படுவதாக மக்கள் மத்தியில் பேசப்பட்டவருகின்றது. இதற்கு சான்றாக பருத்தித்துறை பிரதேச சபையின் ஆளுகைக்கள் உள்ள சாரைகிரி வீதியை செப்பனிடுமாறு மக்களின் தேவைகருதியதாக பிரதேச சபையில் உறுப்பினர்களால் தீர்மானிக்கப்பட்டு அதை நடைமுறைக்கு கொண்டுவருவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

ஆனால் குறித்த வீதியின் செப்பனிடும் தெரிவு நிறுத்தப்பட்டு அதற்கு பதிலாக மக்கள் பாவனை மிகக் குறைவான பிரதேச சபையில் பதிவில் இல்லாத சாத்திரியார் வீதி என்றும் வீதி தனியொரு சிலரது விருப்புக்கு அமைய முன்மொழியப்பட்டுள்ளது.

குறித்த சாரைகிரி வீதியானது நூற்றுக்கும் அதிகமான குடும்பங்கள் வாழும் பகுதியை உள்ளடக்கியதாக இருப்பதால் அதையே செப்பனிடுவதற்கு பிரதேச சபை முதன்மைப் படுத்தியிருந்தது.

இந்நிலையில் குறித்த மக்களதும் பிரதேச சபை உறுப்பினர்களதும் எதிர்பார்ப்புக்களை நிராகரிக்கும் வகையில் குறித்த திட்டத்தை மேற்கொண்டுள்ளதால் மக்கள் கடும் அதிருப்தியுற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: