எரிபொருட்களுக்கான விலைகளில் மாற்றம் இருக்காது – பெற்றோலிய வள அமைச்சர் மஹிந்த அமரவீர!

Saturday, May 2nd, 2020

உலக சந்தையில் எரிபொருளுக்கான விலைகள் வீழ்ச்சியடைந்தாலும் இலங்கையில் விலைகள் குறைக்கப்படாது எனவும் விலை வீழ்ச்சியின் அனுகூலம் நாட்டு மக்கள் அனைவருக்கும் சேரும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பெற்றோலிய வள அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உலகின் அநேக நாடுகளில் எரிபொருளுக்கான கேள்வியில் பாரியளவு வீழ்ச்சி பதிவாகியுள்ளது எனவும், இலங்கையிலும் எரிபொருளின் பயன்பாடு வீழ்ச்சியடைந்துள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறெனினும், எரிபொருள் விலை வீழ்ச்சியினால் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அடையும் லாபம் திறைசேரிக்கு அனுப்பி வைக்கப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.

இந்த நிதியினால் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நலன்கள் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எரிபொருளுக்கான விலை குறைத்தல் அதன் நலன்கள் ஒரு தப்பிற்கு மட்டுமே கிடைக்கும் எனவும் அரசாங்கம் ஒட்டுமொத்த மக்களுக்கும் நலன்களை வழங்குவதற்கு திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Related posts:


இலங்கை தமிழர்கள் விவகாரம் குறித்து இந்தியா எந்த அழுத்தத்தையும் கொடுக்கவில்லை - வெளிவிவகார அமைச்சர் ஜ...
இலங்கையின் முன்னேற்றத்திற்கு டிஜிட்டல் தொழிநுட்பத்தை பயன்படுத்த வேண்டும் - ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்...
பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் பயணிப்பது சவாலான விடயம் - இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க சுட்டி...