கப்ராலின் பொறுப்பில் இருந்த பணிகள் நிதியமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டன – அதிவிசேட வர்த்தமானியும் வெளியீடு!

Thursday, October 7th, 2021

அஜிட் நிவாட் கப்ராலின் பொறுப்பில் இருந்த இராஜாங்க அமைச்சின் பணிகள் மற்றும் பொறுப்புக்கள் நிதியமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன.

இதற்கமைய நிதி, மூலதனச் சந்தை மற்றும் அரச தொழில் முயற்சி மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சின் பணிகள் மற்றும் பொறுப்புக்கள் நிதியமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன.

இராஜாங்க அமைச்சராக செயற்பட்ட அஜிட் நிவாட் கப்ரால் அண்மையில் பதவி விலகிப் பின்னர் மத்திய வங்கியின் ஆளுநராக நியமனம் பெற்றிருந்தார்.

இதனையடுத்து அந்த அமைச்சின் செயற்பாடுகள், பொறுப்புக் கள், முன்னுரிமை, குறித்த நிறுவன மற்றும் சட்ட கட்டமைப்பு ஆகியவற்றை நிதியமைச்சின் கீழ் கொண்டு வரும் வகையில் இந்த அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: