கனிய எண்ணெய், துறைமுகம், தொடருந்து, அஞ்சல், வங்கி – அத்தியாவசிய சேவைகளாக பிரகடனம்!

Saturday, October 30th, 2021

நாட்டில் கனிய எண்ணெய், துறைமுகம், தொடருந்து, அஞ்சல், வங்கி முதலான சேவைகளை அத்தியாவசிய சேவைகளாகப் பிரகடனப்படுத்தி விசேட வர்த்தமானி அறிவிப்பொன்று வெளியாகியுள்ளது.

ஜனாதிபதியினால் நேற்றையதினம் குறித் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

இதேவேளை, வட மாகாணத்தின் புதிய ஆளுநராக ஜீவன் தியாகராஜா நியமிக்கப்பட்டமை தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கமைய, கடந்த 11 ஆம் திகதிமுதல், நடைமுறைக்கு வரும் வகையில், வட மாகாண ஆளுநராக ஜீவன் தியாகராஜா நியமிக்கப்பட்டுள்ளதாக குறித்த வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டுள்ளது.

000

Related posts:


ஜனாதிபதி, பிரதமர் ஆகியோரது சொத்து விவரங்களைத் தரவேண்டும் - தகவல் அறியும் சட்டத்தின் ஊடாக தொண்டு நிறு...
இந்தியமீனவர்களின் அத்துமீறியதொழில் நடவடிக்கைகளால் வடபகுதிகடற்றொழிலாளர்கள் தொடர்ச்சியாகப் பாதிப்பு.
விலைகள் அதிகரிக்கும் பட்சத்தில் அதற்கான மாற்று வழிகளை அரசாங்கம் மேற்கொள்ளும் - வர்த்தகத்துறை அமைச்ச...