உங்கள் பிள்ளைகள் விரட்டியடிக்கப் படுகின்றார்கள் !

Saturday, January 21st, 2017

யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர்களால் தனியார் மருத்துவ கல்லூரிக்கு எதிராக கால வரையறையற்ற பூரணபகிஷ்கரிப்பு போராட்டம் ஒன்று இன்று ஆறாவது நாளாக நடைபெற்று வருகின்றது.

இதுதொடர்பாக அவர்கள் விடுத்துள்ள ஊடக அறிக்கையில்,

16.01.2017 திங்கட்கிழமை முதல் யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர்களால் தனியார் மருத்துவ கல்லூரிக்கு எதிரான கால வரையறையற்ற பூரண பகிஷ்கரிப்பு போராட்டமானது ஆரம்பமானது.

பல்வேறு சமூக நிலைகளில் குறிப்பாக மாவட்ட செயலகம், பிரதேச செயலகங்கள், பாடசாலைகள், தனியார் கல்வி நிலையங்கள், பொது இடங்கள் குறிப்பாக பேருந்து நிலையங்கள், சந்தை, கடைகள் மற்றும் வைத்தியசாலைகளில் தனியார் மருத்துவ கல்லூரிக்கு எதிரான விழிப்புணர்வூட்டும் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றோம்.

அத்துடன் பல அரசியல் பிரமுகர்களையும் சந்தித்துள்ளோம். கையெழுத்து வேட்டையிலும் ஈடுபட்டு வருகின்றோம் என தெரிவித்துள்ளனர்.

கொட்டும் மழைக்குள்ளும் நீதி வேண்டி போராடிய மாணவர்கள். காலை 8.00 மணிக்கு ஆரம்பமான போராட்டம் இரவு 11.30 மணி வரை நீண்டு சென்றுள்ளது. எமக்கு பக்க பலமாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கமும் கைகோர்த்துள்ளது.

இரவு இரவாக தொடரும் யாழ் மருத்துவ பீட மாணவர்களின் போராட்டம். நீயாயமான கோரிக்கைகளிற்கு அரசாங்கம் செவிமடுக்காததன் காரணம் என்ன?

ஜல்லிக்கட்டிற்காக களம் இறங்கிய இளைஞர்கள் கண்களில் இந்த விடயம் தென்படவில்லையா??

மக்களே இது உங்களிற்கான போராட்டம்.உங்கள் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கப் போகும் ஒரு திட்டமிட்ட சதி. அனைவரும் வாருங்கள் ஆதரவு தாருங்கள். தனியார் மருத்துவ கல்லூரியை தரைமட்டம் ஆக்குவோம்.நாட்டின் சுகாதாரத்தை கட்டிக் காப்போம். உங்களிற்காக போராடும் உங்கள் பிள்ளைகள் விரட்டியடிக்கப் படுகின்றார்கள் இதுகூடவா உங்கள் கண்களில் படவில்லை.

2133409941Doc

Related posts: