கனடாவுக்கு ஆள்களை கடத்த திட்டமிட்ட பிரதான சூத்திரதாரி யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர் – பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவிப்பு!
Friday, March 12th, 2021
கடல்வழியாக கனடாவுக்கு ஆள்களை கடத்த திட்டமிட்ட பிரதான சூத்திரதாரி யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர் எனவும், குறித்த நபர் யாழிலிருந்து செயற்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்
அத்துடன் சந்தேகநபர் ஒவ்வொருவரிடமும் தலா மூன்று இலட்சம்முதல் ஐந்து இலட்சம் வரை பெற்றுக்கொண்டு அவர்களை கனடாவிற்கு அனுப்புவதாகத் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் கல்பிட்டியிலிருந்து படகுகள் மூலம் வெளிநாடொன்றிற்கு செல்ல முயன்ற 24 இலங்கையர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கல்பிட்டி பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போது இவர்கள் கைதுசெய்யப்பட்டனர் என கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
கல்பிட்டி பகுதியில் சந்தேகத்திற்கு இடமான லொறியொன்று காணப்பட்டதை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் போதே குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|
|


