QR ஒதுக்கீடுகளை தொடர்ந்து கடைப்பிடிக்கத் தவறிய 40 எரிபொருள் நிரப்பு நிலையங்களின் சேவைகளை இடைநிறுத்த தீர்மானம் – அமைச்சர் கஞ்சன விஜேசேகர அதிரடி அறிவிப்பு!

Thursday, April 6th, 2023

QR ஒதுக்கீடுகளை தொடர்ந்து கடைப்பிடிக்கத் தவறிய 40 எரிபொருள் நிரப்பு நிலையங்களின் சேவைகளை இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

ட்விட்டர் பதிவொன்றில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை பெற்றோலிய சேமிப்பு முனைய அதிகார சபை மற்றும் அதிகாரிகளுடன் இன்று காலை இடம்பெற்ற முன்னேற்ற மீளாய்வு கூட்டத்தில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த 8 வாரங்களுக்கான எரிபொருள் இறக்குமதித் திட்டம், சுத்திகரிப்புச் செயற்பாடுகள் மற்றும் பண்டிகைக் காலத்தில் தொடர்ந்து எரிபொருள் விநியோகம் தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

அந்த கலந்துரையாடலில், QR ஒதுக்கீட்டை மீறி தொடர்ந்து எரிபொருளை விற்பனை செய்யும் 40 எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் சேவைகளை இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மேலும், அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களும் தங்கள் எரிபொருள் தாங்கிகளில் குறைந்தபட்சம் 50% கொள்ளளவு கொண்ட எரிபொருள் இருப்புகளை பராமரிக்க வேண்டும்.

நிறுவனத்திற்குச் சொந்தமான அனைத்து பவுசர்களுக்கும் ஜிபிஎஸ் கருவிகள் பொருத்தும் பணி ஏப்ரல் 15-ஆம் திகதிக்குள் நிறைவடையும், மேலும் இது எதிர்காலத்தில் தனியார் பவுசர்களிலும் செயல்படுத்தப்படும் என எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: