இலங்கை வந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் – பிரதமருக்கு இடையில் கலந்துரையாடல்!
Monday, June 20th, 2022
சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடனான கலந்துரையாடலை மேற்கொண்டுள்ளது.
முன்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று இன்றையதினம் இலங்கைக்கு வருகை தந்திருந்தது. இந்நிலையில், அதன் பிரதிநிதிகள் 10 பேருடன் கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இலங்கை மற்றும் சர்வதேச நாணய நிதிய பிரதிநிதிகளுக்கான கலந்துரையாடல், இணையவழியில் அண்மையில் இடம்பெற்றிருந்தது.
அதற்கு முன்னதாக, இலங்கை அதிகாரிகள் குழுவினர், அமெரிக்காவுக்கு சென்று, சர்வதேச நாணய நிதிய பிரதிநிதிகளைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியிருந்தனர்.
அதன் தொடர்ச்சியாக சர்வதேச நாணய நிதிய பிரதிநிதிகள் இன்று நாட்டுக்கு வருகை தந்துள்ளதுடன், ஒருவாரம் நாட்டில் தங்கியிருந்து முக்கிய பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது..
000
Related posts:
பிரதமரை நீக்குவதாக சுசில் பிரேமஜயந்த முன்னாள் ஜனாதிபதியிடம் தெரிவிப்பு!
விவசாயிகளுக்கு உரிய முறையில் நீர் வழங்கப்படாமல் மோசடி!
அவசரமாக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படவேண்டியவர்களை கொண்டு செல்வதற்கு பொலிஸாரின் அனுமதி அவசியமில்லை...
|
|
|


