தேசிய சம்பளம் மற்றும் ஊழியர் எண்ணிக்கை ஆணைக்குழு நியமனம்!

Friday, March 22nd, 2019

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனாவினால் புதிய தேசிய சம்பளம் மற்றும் ஊழியர் எண்ணிக்கை ஆணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 25 ஆம் திகதி தொடக்கம் இரண்டு வருட கால பகுதிக்கு இந்த ஆணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைவாக 2016 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 3 ஆம் திகதி நியமிக்கப்பட்ட சம்பள குழுவின் கால எல்லை எதிர்வரும் 24 ஆம் திகதியுடன் நிறைவடைகின்றது. புதிய ஆணைக்குழுவின் தலைவராக எஸ். ரணுக்கெ நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும் 12 உறுப்பினர்கள் இதில் நியமிக்கப்பட்டுள்ளனர். அரச மற்றும் தனியார் ஊழியர்களுக்கென சம்பள கொள்கையை வகுப்பதே இந்த ஆணைக்குழுவின் நோக்கமாகும்.

அரசாங்க துறையில் சம்பளம், கொடுப்பனவு, வருடாந்த கொடுப்பனவு உள்ளிட்ட ஏனைய கொடுப்பனவுகள் தொடர்பில் தீர்மானங்களை மேற்கொள்ளுதல் அவற்றை தயாரித்தல் உள்ளிட்ட விடயங்களை மேற்கொள்வதற்கான அதிகாரங்களை வழங்குவதற்காகவும் இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளது.

மொத்த அரசாங்க சேவையில் ஒவ்வொரு நிறுவனத்திற்காக அங்கீகரிக்கப்பட்டுள்ள பணியாளர் சபையை மீள மதிப்பீடு செய்து மாகாண சபை உள்ளிட்ட மொத்த அரச துறையில் ஒவ்வொரு நிறுவனத்திற்காக பணியாளர் சபையை முன்மொழிவதற்கு ஆணைக்குழுவிற்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

Related posts:

அடுத்த வாரம் ரயில் போக்குவரத்தை அத்தியாவசிய சேவையாக மாற்றும் வர்த்தமானியை வெளியிட அமைச்சு திட்டம்!
கடன் தவணை செலுத்தாததன் அடிப்படையில் வாகனங்களை பறிமுதல் செய்வது அரசாங்கத்தின் உத்தரவை மீறும் செயலாகும...
யாழ் மாவட்டத்திற்கு மேலும் மூன்று இலட்சத்திற்கும் அதிகமான தடுப்பூசிகள் தேவை – மாவட்ட கொரோனா ஒழிப்பு...