இலங்கைக்கு அருகே மற்றுமொரு சூறாவளி உருவாகும் சாத்தியம் – பொதுமக்களுக்கு மீண்டும் எச்சரிக்கை!

Saturday, November 28th, 2020

வங்காள விரிகுடாவை அண்மித்த கடற்பரப்பில் மற்றுமொரு தாழமுக்க நிலைமை உருவாகுவதற்கான சாத்தியம் காணப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த தாழமுக்க நிலைமையானது, எதிர்வரும் சில தினங்களில் நாட்டிலும், நாட்டை சூழவுள்ள பகுதிகளிலும் பாதிப்புக்களை ஏற்படுத்துவதற்கான சாத்தியம் உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த வார இறுதியில் வங்காள விரிகுடாவில் தாழமுக்க நிலைமை உருவாகும் என்றும் அடுத்த வாரம் இலங்கை மற்றும் தென்னிந்தியாவை அடைவதற்கு முன்னர் சூறாவளி புயலாக மாறக்கூடும் என்றும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

அடுத்த வாரம் பிற்பகுதியில் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளுக்கு அருகே மற்றொரு தாழமுக்க நிலைமை ஏற்பட வாய்ப்புள்ளது என்றும் நிபுணர்கள் தெரிவித்தனர்.

நிவார் சூறாவளி நெருங்கியவுடன் இந்த வாரம் வட இலங்கைக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் புத்தளம் முதல் பொத்துவில் வரை மன்னார், காங்கேசன்துறை, திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு வழியாக கடல் பகுதிகளுக்குள் செல்ல வேண்டாம் என்று மீன்பிடி சமூகங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts: