கட்டுப்பாட்டு விலையை மீறும் அரிசி வர்த்தகர்களுக்கான அபராதம் – சட்டமூலம் சட்டமா அதிபருக்கு!
Friday, July 2nd, 2021
அதிக விலைக்கு அரிசியை விற்பனை செய்யும் வர்த்தகர்களிடம் அறவிடப்படும் அபராதத்தை ஒரு இலட்சம் ரூபாயாக அதிகரிப்பது தொடர்பான சட்டமூலம் சட்டமா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
அதிகரித்த விலைக்கு அரிசியை விற்பனை செய்யும் செயற்பாட்டை முற்றாக தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் அண்மைக்காலமாக அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருவதாக தொடர்ச்சியாக மக்கள் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றனர் என்பதுக் குறிப்பிடத்தக்கது.
Related posts:
இரவு 10 மணிமுதல் மீண்டும் ஊரடங்குச் சட்டம்!
ரணில் விக்ரமசிங்கவுக்கு பூகோளிய அரசியல் தொடர்பில் கருத்துரைக்கும் தார்மீக உரிமை கிடையாது - இராஜாங்க ...
நாளை தைப்பொங்கல் – பொருட்களை கொள்வனவு செய்வதில் மக்கள் மும்முரம்!
|
|
|


