கட்டுநாயக்கா விமான நிலையத்திற்கு 124 மில்லியன் ரூபா வருமானம் – இலங்கை சுங்கத் திணைக்களம்!
Thursday, April 4th, 2019
இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் கட்டுநாயக்கா விமான நிலையத்தில் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கைகளில் 124 மில்லியன் ரூபா வருமானம் ஈட்டப்பட்டதாக, இலங்கை சுங்கம் தெரிவித்துள்ளது.
குறித்த காலப்பகுதியில் 41 சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
சட்டவிரோதமாக நாட்டிற்குக் கொண்டுவரப்பட்ட தங்கம், சிகரட், போதைப்பொருள், வெளிநாட்டு நாணயம் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் சுங்க திணைக்களத்தினால் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றன.
இவ்வாறு சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்டு, அரசுடமையாகப்பட்ட பொருட்களின் மொத்த பெறுமதி 124 மில்லியன் ரூபாவாகும் என சுங்க ஊடகப்பேச்சாளர் சுனில் ஜயரத்ன குறிப்பிட்டுள்ளார்.
கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில், இந்த வருடத்தில் சட்டவிரோதமாக, அதிக பொருட்கள் கொண்டுவரப்பட்டுள்ளதாக இலங்கை சுங்கம் தெரிவித்துள்ளது.
Related posts:
அத்துமீறி நுழைந்த 28 மீனவர்கள் கைது!
கச்சதீவில் கண்காணிப்பு கோபுரம் அமைக்கவில்லை - விகாஸ் ஸ்வரூப்
ஆசிரியர் கல்வியியலாளர் சேவைக்கு 215 தமிழர் தகுதி!
|
|
|


