கட்டணம் செலுத்தத் தவறிய பத்து இலட்சம் மின்சார இணைப்புக்கள் நாடளாவிய ரீதியில் துண்டிப்பு – அமைச்சர் கஞ்சன விஜேசேக்கர தெரிவிப்பு!
Thursday, January 11th, 2024
கட்டணம் செலுத்தத் தவறிய பத்து இலட்சம் வீடுகளுக்கான மின்சார இணைப்பு நாடளாவிய ரீதியில் துண்டிக்கப்பட்டுள்ளதாக மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேக்கர தெரிவித்துள்ளார்
இவ்வாறு மின் இணைப்பு துண்டிக்கப்பட்ட பாவனையாளர்களில் பெரும்பான்மையானவர்கள் இலங்கை மின்சார சபையின் சேவையை பெற்றுக்கொண்டவர்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் மொத்தமாக பத்து இலட்சத்து 64 ஆயிரம் வீடுகளின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதேநேரம் உரிய நேரத்தில் மின்சாரக் கட்டணங்களை செலுத்த தவறிய வாடிக்கையாளர்களது மின் இணைப்புக்கள் மட்டுமே இவ்வாறு துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
ஆயுர்வேத மருந்து பாவனை விழுமிய திட்டக் கோவை வெளியீடு!
கஜா புயல் 15ம் திகதி கரையைக் கடக்கும் : இலங்கையின் வடபகுதிக்கும் பாதிப்பு?
யாழ் மாநகர சபையின் இடைக்கால முதல்வரைத் தெரிவு செய்யும் கூட்டம் நிறைவெண் இல்லாத காரணத்தினால் ஒத்திவைப...
|
|
|


