கஜா புயல் 15ம் திகதி கரையைக் கடக்கும் : இலங்கையின் வடபகுதிக்கும் பாதிப்பு?

Tuesday, November 13th, 2018

வங்கக் கடலில் உருவாகியுள்ள கஜா புயல் நவம்பர் 15ம் திகதி கடலூர் – பாம்பன் இடையே கரையைக் கடக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது.

முன்னதாக சென்னை – நாகப்பட்டினம் இடையே கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது நவம்பர் 15ம் தேதி பிற்பகலில் கடலூர் – பாம்பன் இடையே கஜா புயல் கரையை கடக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது.

சென்னையில் இருந்து 720 கி.மீ. தொலைவில் உருவாகியுள்ள கஜா புயல் வரும் 24 மணிநேரத்தில் தீவிரமடையும் என்று இந்திய வானிலை ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது.

வங்கக் கடலில் உருவாகியுள்ள கஜா புயல்இ சென்னையில் இருந்து கிழக்கு – வடகிழக்காக 720 கிலோ மீட்டர் தொலைவிலும் நாகப்பட்டினத்தில் இருந்து கிழக்கு வடகிழக்காக 820 கிலோ மீட்டர் தூரத்திலும் கஜா புயல் நிலை கொண்டுள்ளது.

இது மேலும் மேற்கு மற்றும் தென் மேற்காக நகர்ந்து வரும் 24 மணி நேரத்தில் தீவிர புயல் சின்னமாக வலுப்பெற்று அடுத்த 24 மணி நேரத்தில் அதே தீவிரத்துடன் நீடிக்கும். அதன்பிறகு மேற்கு தென்மேற்காக நகர்ந்து சற்று வலுவிழந்து வடக்கு தமிழகக் கடற்பரப்பில் கடலூர் – பாம்பன் பகுதிகளுக்கு இடைப்பட்ட தூரத்தில் நவம்பர் 15ம் தேதி கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த புயல் சுமார் 1.5 கிலோ மீட்டர் தூரத்துக்கு அரபிக் கடல் மற்றும் லட்சத் தீவுகளை தொட்டபடி விரிந்து பரந்து உள்ளது.

இதன் காரணமாக வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திராவின் ஒரு சில இடங்களில் நவம்பர் 14ம் திகதி இரவு முதல் கன மழை பெய்யக் கூடும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அன்றைய தினம் மணிக்கு 45 – 55 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக் கூடும். இது படிப்படியாக உயர்ந்து 14ம் திகதி நள்ளிரவில் மணிக்கு 80 – 90 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும்.. இதனால் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

தற்போதைய நிலவரப்படி நவம்பர் 14ம் தேதி இரவு வரை புயல் கரையை கடக்கும் வரை தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் காரைக்கால் கடலூர் புதுச்சேரி விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் பலத்த காற்றானது மணிக்கு 80 முதல் 90 கிலோ மீட்டர் வேகத்திலும் சமயங்களில் 100 கிலோ மீட்டர் வேகத்திலும் பலத்த காற்று வீசக் கூடும்.

Related posts: