கட்டணங்கள் அதிகரிப்பு தொடர்பில் புதனன்று தீர்மானம் – இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம !
Monday, December 27th, 2021
அடுத்த வாரம் பேருந்து கட்டணங்கள் அதிகரிக்கும் என இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
அத்துடன் இவ்விடயம் தொடர்பில் எதிர்வரும் புதன்கிழமை தீர்மானிக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை சமீபத்தைய எரிபொருள் விலை அதிகரிப்பு காரணமாக பேருந்து கட்டணங்களை அதிகரிக்கவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் பல நிபந்தனைகளின் அடிப்படையிலேயே விலை மாற்றங்களை மேற்கொள்ளவுள்ளோம் எனவும் சுட்டிக்காட்டிய அவர் பொதுமக்களின் நிலைமையை கருத்திற் கொண்டு சிறிய அதிகரிப்பையே மேற்கொள்ளவுள்ளோம் எனவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது..
Related posts:
அனைத்து கட்சி இடைக்கால அரசாங்கத்தை ஸ்தாபிக்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன இணக்கம்!
34,000 மெற்றிக்தொன் சமையல் எரிவாயு ஓடர் செய்யப்பட்டுள்ளது - லிட்ரோ நிறுவனம் விசேட அறிவிப்பு!
கல்வி பொதுத் தராதர உயர் தரப் பரீட்சை நாளை ஆரம்பம் - வினாப் பத்திரங்கள் பரீட்சை இணைப்பு மையங்களுக்கு ...
|
|
|


