கடும் வறட்சியினால் வட,க்கு – கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த 11 ஆயிரத்து 583 பேர் பாதிப்பு – அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தகவல்!

நாட்டின் பல்வேறு பகுதிகளில் மழையுடனான காலநிலை நிலவுகின்ற போதிலும் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் கடந்த இரண்டு மாதகாலமாக பல இடங்களில் வறட்சி நிலை காணப்படுவதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இந்த வறட்சியினால் மன்னார், யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 4 ஆயிரத்து 43 குடும்பங்களை சேர்ந்த 11 ஆயிரத்து 882 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதையடுத்து அவர்களுக்கு தேவையான குடிநீர், நீர் தாங்கி ஊர்திகள் ஊடாக வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
அதேவேளை நாட்டில் ஏனைய மாகாணங்களில் தொடர்ந்து நிலவிவரும் மழையுடனான காலநிலை காரணமாக பொது மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.
தொடர் மழையினால் ஆங்காங்கு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் பலத்த காற்று காரணமாக 393 குடும்பங்களைச் சேர்ந்த ஆயிரத்து 583 பேர் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|