கடும் வரட்சி: நாட்டில் 3 இலட்சம் பேர் பாதிப்பு – இடர்முகாமைத்துவ நிலையம்!

Tuesday, May 21st, 2019

நாட்டில் ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக சுமார் 3 இலட்சத்திற்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் இதில் வடக்கு, கிழக்கு மலையகம் உள்ளிட்ட நாட்டின் 17 மாவட்டங்களில் இந்த கடும் வறட்சி நிலவுவதாகவும் இடர்முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.

இதேவேளை, புத்தளம் மாவட்டத்தில் கடந்த 5 மாதங்களுக்கு மேலாக கடும் வறட்சி நிலவுகின்றது. இதன் காரணமாக புத்தளம் மாவட்டத்திலுள்ள 8 பிரதேச செயலாளர் பிரிவுகளிலுள்ள மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

புத்தளம் மாவட்டத்தில் மாத்திரம் 9960 குடும்பங்களைச் சேர்ந்த 34,673 பேர் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

மேலும் வறட்சி காரணமாக குளங்களில் நீர் வற்றியுள்ளதுடன், மேய்ச்சல் தரைகளும் கருகிப்யேுள்ளதாக கால்நடை வளர்ப்பாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை, வறட்சி காரணமாக,

* யாழ். மாவட்டத்தில் 13,769 குடும்பங்களைச் சேர்ந்த 46,041 பேர்

* மன்னார் மாவட்டத்தில் 16,243 குடும்பங்களைச் சேர்ந்த 56,324 பேர்

* முல்லைத்தீவு மாவட்டத்தில் 12,770 குடும்பங்களைச் சேர்ந்த 40,107 பேர்

* அம்பாறை, திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களை உள்ளடக்கிய கிழக்கு மாகாணத்தில் 16,382 குடும்பங்களைச் சேர்ந்த 54,479 பேர்

பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

Related posts: